நவம்பர் மாதத்தை, அமெரிக்காவில் மாதுளை மாதமாக கொண்டாடுகின்றனர்.செப்டம்பர் முதல், பிப்ரவரி வரை உலகின் பெரும்பாலான பகுதிகளில் மாதுளை அறுவடை நடைபெறுகிறது. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என 3 வகைகள் உள்ளன. இது, மருத்துவக் குணம் வாய்ந்தது. மாதுளையின் பூர்வீகம் ஈரான். இன்று மாதுளையில் கணக்கு இல்லாத வகையில் கலப்பின வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்தியில் "அனார்கலி' என்ற பெயர், மாதுளம் மொட்டினைக் குறிக்கிறது. பெண்ணின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய முடியாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல, மாதுளம் பழத்தில் விதைகள் மறைந்து இருப்பதால், "மாது உள்ளம் பழம்' என்னும் பெயரே, மாதுளம் பழம் என தமிழில் ஆனதாக கூறுவர். மாதுளம் பழம் விவசாயத்தில், முன்னணியில் மகாராஷ்டிராவும் அதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகமும் உள்ளன.
General knowledge,current affairs,gk,answers
No comments:
Post a Comment